(ஜெ.ஜெய்ஷிகன்)

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சண்முகம் குரு என்பவர் கடமையிலிருக்கும் போது இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து கோறளைப்பற்று பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை (08) பிற்பகல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அரசே எமது பாதுகாப்பை உறுதிசெய்,எமக்கும் உண்டு பொலிஸ் அதிகாரம், உடனடி நீதி விசாரணை வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.