(படுவான் பாலகன்) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளி ஆற்றாங்கரையை அண்டிய சதுப்பு நிலப்பகுதியில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று இன்று(05) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் பண்டாரியாவெளி கிராமத்தைச் சேர்ந்த 02பிள்ளைகளின் தந்தையான நல்லதம்பி சிவஞானசெல்வம் (வயது 67) என இனங்காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது வீட்டில் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக நேற்று(04) சனிக்கிழமை 02மணியளவில் வீட்டைவிட்டு வெளியேறிய குறித்தநபர் மாலை வீடுவந்து சேராததை அடுத்து குடும்பத்தார் தேடிய போது இன்று(05) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02மணிக்கு பண்டாரியாவெளி ஆற்றாங்கரையை அண்டிய சதுப்பு நிலப்பகுதியில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில்; சடலத்தை கண்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் குறித்த விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













