வவுணதீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் கொடி தினத்தை ஒட்டி வாகனங்களை கழுவி நிதி சேகரிக்கும் நிகழ்வு

(சண் சபா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் எற்பாட்டில் இளைஞர் கொடிதினத்தை முன்னிட்டு வாகனங்களை கழுவி நிதி சேகர்க்கும் வேலைத்திட்டம் புதன்கிழமை 1ஆம் திகதி வவுணதீவு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் தவராஜா விமல்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கணேசமூர்த்தி சசீந்திரன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் , மண்முனை மேற்கு பிரதேச சம்மேளனங்களின் பொருளாளரான செல்வி.சி.லக்சனா உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.