புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பு ; ஒன்பதாயிரம் பக்தர்கள் பங்கேற்பு !

(எஸ்.சதீஸ் )
கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலங்களில் ஒன்றாக திகழும், மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பு வைபவம் நேற்று வௌ்ளிக்கிழமை 10ம் திகதி பிற்பகல் மிக சிறப்புடன் இடம்பெற்றது.

மூன்று மணி நேரம் இடம்பெற்ற இத் தீ மிதிப்பு நிகழ்வில் சுமார் ஒன்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு தீயினை மிதித்து அம்பாளுக்கான நேற்றிக்கடனை நிறைவுசெய்தனர்.

நேற்றயதினம் இறுதி நாளன்று இரவு இவ் ஆலயத்திற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து அம்பாளை தரிசித்தனர்.