கல்குடா கல்வி வலயத்தில் அதிபர், பகுதித்தலைவர்களுக்கான பல்மட்டக் கற்பித்தல் முறை பற்றிய அறிமுகம்.

 (சித்தா)
கல்குடா கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர், பகுதித்தலைவர்களுக்கான பல்மட்டக் கற்பித்தல் முறை பற்றிய அறிமுகச் செயற்பாடு இன்று கல்குடா கல்வி வலயத்தின் கேட்போர் கூடத்தில் கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ( முகாமைத்துவம்) திரு.தி.ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் அறிமுகச் செயற்பாட்டினை கல்குடா கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ( ஆரம்பக் கல்வி) கே.யோகராசா அவர்களின் நெறிப்படுத்தலில் காலை 8.30 மணி தொடக்கம் பி.ப.5.00 மணிவரை நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆரம்பக் கல்விப் பிரிவினரால் தயாரிக்கப்பட்ட பல்மட்டக் கற்பித்தலுக்கான கற்றல் வளமாக்கி பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
சுமார் 20 பங்குபற்றுனர்களுடன் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களும் இவ் அறிமுகச் செயற்பாடுகளில் பங்கெடுத்துக் கொண்டனர். இச் செயற்பாடுகள் யுனிசெவ் அனுசரணையுடன் ஹவ்சோ நிறுவனம் நிதிவசதிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்