
(ரவிப்ரியா)
மடக்களப்பு இந்துக் கல்லூரியும். பெரியகல்லாறு மத்தியகல்லூரியும் மோதும்இ இமயத்திற்கான (வற்றில் ஒப் த எவறெஸ்ற்) வருடாந்த கிரிக்கற் சமர் 16ந்திகதி சனிக்கிழமை மட் இந்துக்கல்லூரி
அதிபர் கே.அருள்பிரகாசம் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசியபாடசாலை விளையாட்டு மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்றது.
50 ஓவருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள இப்போட்டியின் காலை நேர ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரமும், விசேட விருந்தினர்களாக பட்டிருப்பு பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.உலககேஸ்பரம், கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.திரவியராஜா, உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் என்.லவகுமார், கிழக்கு மாகாண ரெலிகொம் பிரதி பொது முகாமையாளர் எந்திரி வை.கோபிநாத், போதான வைத்தியசாலை விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஏ.ஏ.எம். பாஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலையில் பரிசளிப்பு விழாவில், பிரதம விருந்தினராக. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னாவும், அதி விசேட விருந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராஜா ஆகியோரும் விசேட விருந்தினர்களாக மட் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.கோவிந்தராஜா, மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன், மட்டக்களப்பு கிரிக்கற் கழக தலைவர் எந்திரி என்.வி.றஞ்சன் மொவிற்றல் பிராந்திய முகாமையாளர் ரி.தர்மேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
2011ல் பெரியகல்லாற்றில் முதற் தடவையாக நடந்த போட்டியில் பெரியகல்லாறு மத்தியகல்லூரியும், 2012ல் மட்டக்களப்பில் நடந்த போட்டியில் இந்துக்கல்லூரியும். 2013 பெரியகல்லாற்றில் நடந்த போட்டியில் மத்திய கல்லூரியும். 2014ல் மட்டக்களப்பில் நடந்த போட்டியிலும் கடந்த வருடம்(2015) பெரியகல்லாற்றில்; நடந்த போடடியில் இந்துக் கல்லூரியும் கிண்ணத்தை சவீகரித்தள்ளன. இந்துக்கல்லூரி 3தடவையும்இ மத்திய கல்லூரி 2தடவையும் கிண்ணத்தை சுவீகரித்தள்ளது. எனவே இந்த வருடத்திற்கான போட்டி சவால் மிக்கதாக அமையும் என்று கிரிக்கற் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போலவே கடும் சமராகவே இருந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெரியகல்லாறு மத்திய கல்லூரி களத் தடுப்பை தெரிவு செய்தது. இந்துக்கல்லூரி துடுப்பாட்டத்தில் இறங்கியது. சிறந்த பந்து வீச்சுக் காரணமாக இந்தக்கல்லூரி 46 ஓவரில் சகல விக்கற்றுக்களையும் இழந்து மத்திய கல்லூரிக்கு 103 என்ற இலகுவான வெற்றி இலக்கை நிர்ணயித்தது. பதிலக்குத் துடுப்பெடுத்தாடிய மத்தியகல்லூரி அணி 26 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது. ரி.லுக்சாந் 58 ஓட்டங்களை தனது அணிக்கு பெற்றுக் கொடுத்து பெரியகல்லாறு மத்தியகல்லூரி இமயத்திற்கான கிண்ணத்தை சுவீகரித்துக் கொள்வதற்கு அடிகொலினார். அவரே அட்டநாயகனாகவும் தெரிவாகியுள்ளார்;.
இப்போட்டி அரம்பித்த 2011 காலத்திலிருந்து 2014 வரையிலமான 3 போட்டிகளிலும் பெரியகல்லாற்றில் நடந்தபோட்டிகளில் மத்திய கல்லுரியும்இ மட்டக்களப்பில் நடந்த போட்டியில் இந்துக்கல்லூரியம் மாறி. மாறி வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலை 2015ல் பெரியகல்லாற்றில் நடந்த போடடியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பெற்றி பெற்று திருப்பு முனையை ஏற்படுத்தியது. இது இச் சமருக்கான சவாலை அதிகரிக்கச் செய்தது.
எனவே 2016க்கான இப் போட்டி மிகவும் சவால்மிக்க போட்டியாக அமையுமென எதிhபார்க்கப்பட்டது. மட்டக்களப்பில் பெரியகல்லாறு அணி வெற்றிபெற்று மீண்டும் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுமே தலா மூன்று போட்டிகளில் வென்று சமநிலையை அடைந்துள்ளன. எனவே 2017க்கான போட்டி பலத்த சவாலுக்கு மத்தியில் இடம்பெறும் என்பதில் ஐயமே இல்லை.




















