கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் 2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை

(சித்தா)
கிழக்கு மாகாணத்தில் ஆரம்பக் கல்வியின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், எம்.ரி.ஏ.நிசாம் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆரம்பக் கல்விப் பிரிவிற்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.உதயகுமார் செயற்பாடுகளை வலயங்களின் ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றார். இதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட ஏனைய அதிகாரிகள் ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர்.
இந்த வகையில் 2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை இன்று (16.07.2016) தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் நடாத்தப்பட்டது. இதற்காக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இறுதிப் பரீட்சை நடைபெறுவது போன்று இப் பரீட்சை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.