பாலமீன்மடு - திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 8ம் நாள் திருவிழா (படம் & வீடியோ)

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு, பாலமீன்மடு - திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் 8ம் நாள் திருவிழா நேற்றயதினம்(19ம் திகதி) செவ்வாய்கிழமை இரவு மிக சிறப்புடன் இடம்பெற்றது.

அன்றயதின் முருகப்பெருமானுக்கு  அபிஷேக பூசைகள் நடாத்தப்பட்டு, மேள, நாதஸ்வர வாத்தியங்களுடன் சுவாமி உள்வீதி மற்றும் வௌிவீதியுலா வந்தமை சிறப்பம்சமாகும்.

நாளை காலை தீர்த்தோற்சதுத்துடன் இவ்வருட திருவிழா நிறைவுபெறவுள்ளமை குறி்பிடத்தக்கது.

 பாலமீன்மடு- திராய்மடு வில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயம் இற்றைக்கு 70வருடங்களுக்கு முன் வணக்கத்திற்குரிய நல்லதம்பி சடையப்பசுவாமிகள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அடியார்களுக்கு அருள்வழங்கிக்கொண்டிருக்கும்  முருகப்பெருமானாக மக்களுக்கு காட்சி தருகின்றார்.