(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து 2015 இல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் பாராட்டு விழாவும் இன்று மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கிழக்கு மாகாணத்தின் முதல்தர நிலையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கி- களுவாஞ்சிக்குடிக் கிளையின் முகாமையாளர் ஜி.கதிரேசபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் அவர்களும்,மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் திரு.நா.நாகேந்திரன் அவர்களுடன் தேசிய சேமிப்பு வங்கியின் ஊழியர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் சுமார் 54 மாணவர்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியினால் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பிரமுகர்கள் தேசிய சேமிப்பு வங்கியின் சிறப்புப் பற்றியும், சேமிப்பின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினர்












