உதைபந்தாட்டப் போட்டியில் படுவான்கரைப்பிரதேச பாடசாலைகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு


(படுவான் பாலகன்) கிழக்கு மாகாண பாடசாலை மட்ட உதைபந்தாட்டப்போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய 17வயதுப்பிரிவு பெண்கள் அணி மாகாணத்தில் முதலிடத்தினை பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.


கிழக்கு மாகாணத்தினால்; இன்று(12) செவ்வாய்க்கிழமை நடாத்தப்பட்ட இப்  போட்டியில் கிழக்கு மாகாணத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்திய மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றிய 17வயது பெண்கள் உதைபந்தாட்டப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பாடசாலைகளே முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வயதுப்பிரிவின் இறுதிப்போட்டிக்கு படுவான்கரைப்பிரதேசத்தை சேர்ந்த கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவர்களும், பன்சேனை பாரி வித்தியாலய மாணவர்களும் தெரிவாகி பன்சேனை பாரிவித்தியாலய மாணவர்கள் முதலிடத்தினையும், கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.