கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய தொழில் நுட்ப ஆய்வு கூடம் திறப்பு விழா

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய தொழில் நுட்ப ஆய்வு கூடமானது வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


வித்தியாலய அதிபர் நா.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.போல், பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அத்தோடு பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப ஆய்வு கூட கட்டடத்திற்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவியரின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.