இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டு விழா

(கதிரவன்) 

இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை 2016.07.17 திருகோணமலையில் நடைபெற்றது. ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு. திருகோணமலை> அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த கிளைகளின் ஊழியர்கள் 400க்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். 

இலங்கை வங்கியின் பிரதி பொது முகாமையாளர்களான எம்.ஜே.சலாகொட> சி.அமரசிங்க ஆகியோர்  பிரதம் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன் நிமல் பெரோ சிறப்பு அதிதியாக பங்கேற்றார்.  அதிதிகளும் ஊழியர்களும் கடற்படைத்தள வீதி டைக் வீதி சந்தியில் இருந்து ஊர்வலமாக போட்டி நடைபெறும் ஏகாம்பரம் மைதானத்திற்கு மெதடிஸ்த பெண்கள் கல்லூரி வாத்திய குழுவினரால் வரவேற்று அழைத்து வரப்பட்டனர். 

மெய்வல்லுநர் போட்டிகள்> உதைபந்து> கரப்பந்து> வலைப்பந்து> மென்பந்து> துடுப்பாட்டம் என்பன ஊழியர்களுக்கு இடையே நடத்தப்பட்டது.