(படுவான் பாலகன், வரதன்) அறிவுமைய அபிவிருத்தியை உறுதிசெய்து கொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலைப் பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் நிர்மானிக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வுகூடம்; திறக்கும் நிகழ்வு இன்று(28) வியாழக்கிழமை இடம்பெற்றது.
தொழிநுட்ப ஆய்வு கூடத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி திறந்து மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளித்தார். இதன்போது , பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பிரதி தவிசாளரும் மாகாணசபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, இரா.துரைரெட்ணம் வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், பிரதிக்கல்விப்பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு நா.சுந்தரலிங்கம், குணசேகரம் ஆகியோர் சிறுதொகை நிதியையும் வழங்கி வைத்தனர்.












