பஸ்ஸின் அதிகரித்த வேகத்தால் விபத்து

இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மட்டக்களப்பு தன்னாமுனை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாதில், அறுவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.   ஞாயிற்றுக்கிழமை மாலை (17) இடம்பெற்ற இச் சம்பவத்தில்,

வாழைச்சேனை இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது. பஸ்ஸின் அதிகரித்த வேகமே இதற்குக் காரணமென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவயவந்திருக்கின்றது. மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்