மகிழூர்முனை ஸ்ரீ மண்டபத்தடி பிள்ளையார் ஆலய பூட்டு உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருட்டு

(நிசாந்) மட்டக்களப்பு  மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக் குடபட்ட மகிழூர்முனைக்கிராமத்தின் மண்டபத்தடி வலன்புரி பிள்ளையார் ஆலயத்தில் 27.07.2016 புதன்கிழமை இரவு அன்று திருடர் களினால் ஆலய கதவு பூட்டு உடைக்கப்பட்டு ஆலய பிள்ளையார், நாகதம்பிரான், மாரி யம்மன் உண்டி யல்கள் மற்றும் ஆலய ஒலிபெருக்கி சாதனங்கள் என்பன களவாடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினர் களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதோடு கிராம உத்தியோகத்தர்,  பிரதேச கலாசார உத்தியோகத்தர் , மாவட்ட கலாசார உத்தியோகத்தர் அவர்களுக்கு தெரியப்படுத்தவே அவர்கள் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .