எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொகுதிவாரி தேர்தல் முறைமைக்கு அமைய நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த தேர்தல் எதிர்வரும் வருடம் ஆரம்ப பகுதியில் இடம்பெறும் என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்கள் நேற்றிரவு இலங்கை மன்றக் கல்லூரியில் ஜனாதிபதியை சந்தித்த போது இதனை குறிப்பிட்டுள்ளார்.













