கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் பேராலயத்தின் இவ்வருட மஹோற்சவத்தின் கொடியேற்றம் இன்று 24ஆம் திகதி பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று 23ம் திகதி மாலை மட்டக்களப்பு கோட்டைமுனை அருள்மிகு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு இடம்பெற்றது.












