மட்டக்களப்பு, அமிர்தகழி தூய கப்பலேந்தி மாதா அலயத்தில் கத்தோலிக்க இளைஞர்களால் இரத்ததான முகாம் இன்று 17ஆம் திகதி நடாத்தப்பட்டது.ஒரு துளி இரத்ததானம் வழங்கி ஒரு உயிரை காப்போம் எனும் தொனிப்பொருளில், தூய கப்பலேந்தி மாதா அலய கத்தோலிக்க இளைஞர் ன்றியத்தின் ஏற்பாட்டில், தூய கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை சீ.வி.அன்னதாஸ் தலைமையில் மேற்படி இரத்ததானம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இளைஞர்கள் சமுகசேவைகளை மேற்கொண்டு சமுகத்திற்கு முன்மாதிரியாக திகழவேண்டும் எனும் கொள்கைக்கு அமைவாகம் மேற்படி இவ் இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டதாக இதில் கலந்துகொண்ட இளைஞர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு சேவையாற்றினர்.






















