(ஜெ.ஜெய்ஷிகன்)
மகுடம் கலை இலக்கிய வட்ட தலைவர் கவிஞர் வி.மைக்கல்
கொலின் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்வின் முதன்மை அதிதியாக மட்/ மாவட்ட அரசாங்க
அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் கலந்து
கொள்கிறார்.
நூல் தொடர்பான நயவுரையை முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண
கலாசார பணிப்பாளர் கலாபூசணம் எஸ்.எதிர்மன்னசிங்கம் அவர்களும் ‘ ஈழத்து இலக்கியத்தில் தாமரைத் தீவானின் தடங்கள் ‘ என்ற தலைப்பில் பேராசிரியர் செ.யோகராசா அவர்களும்
சிறப்புரை ஆற்றுகின்றனர்.
என்பத்தைந்தாவது அகவையை பூர்த்தி செய்யும் ஈழத்தின்
மூத்த கவிஞர் தாமரைத் தீவானை சிறப்பிக்கும் முகமாக வெளியிடப்படவுள்ள இந் நூலின்
முதல் பிரதியை மட்/மாவட்ட தமிழ்ச் சங்க பொருளாளரும் , கிழக்கு மாகாண நிர்மாணிப்பு தொழில்கள் கூட்டமைப்பின்
தலைவருமான திரு.வி.ரஞ்சிதமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொள்ள நன்றியுரையையும் ஏற்
புரையையும் கவிஞர் தாமரைத் தீவான் நிகழ்த்தவுள்ளார்.
நிகழ்வினைதிரு ஜீ .எழில் வண்ணன் அவர்கள் தொகுத்து
வழங்குவார்.














