மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து GV வைத்திய சாலை நடாத்திய இரத்த தான நிகழ்வு

(கல்லடி சிவகுமார்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து GV வைத்திய சாலை நடாத்தய   இரத்த தான வைபவத்திற்கு மட்/ தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் தங்களது பூரண ஒத்துழைப்பினை நல்கியிருந்தது.

மிக மிக உற்சாகத்துடன் பொதுமக்களும் ,இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்களும் ,GV வைத்தியசாலைபணியாளர்களும் இரத்த தானம் வழங்கினர். 



மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் E.J பயஸ் ராஜ் மற்றும் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திருமதி பிரசாந்தி பிரியதர்சன் ஆகியோரும் பங்குகொண்டு நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.

 மட்/ போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு வைத்திய உத்தியோகத்தர் DR, K. விவேகானந்தநாதன் பிரதமஅத்தியாக கலந்து சிறப்பித்தார்.