Prisma அன்ட்ரொய்டில் வெளியானது


அன்ட்ரொய்ட் சாதனங்களுக்கு Prisma செயலி மீண்டும் நேற்று (24) முதல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரத்திற்கு முன்னர் Prisma எனும் கையடக்க சாதனங்களுக்கான செயலி அன்ரொய்ட் சாதனங்களில் முன்னோட்டமாக வெளியிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே ஐபோன்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த செயலியில் புகைப்படம் ஒன்றை காட்டூன் போன்ற பல்வேறு வகையில் மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் அன்ட்ரொய்ட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்போது அதற்கு பாரிய வரவேற்பு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் அதன் முன்னோட்ட பதிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.


ஏன் நிறுத்தப்பட்டது?

குறித் செயலியில் புகைப்படத்தை தரவேற்றி இணைய வழியில் தொடர்புபடுத்தி அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இது குறித்த நிறுவனத்தின் சேர்வரில் (Server) இடம்பெறும் செயற்பாடாகும். குறித்த செயற்பாட்டை மேற்கொள்ள அதிகமானோர் முயற்சி செய்தமையால், அவர்களது சேர்வரால் இடம்கொடுக்க முடியாமல் போனது. இதனாலேயே அவர்கள் அன்ட்ரொய்ட் சாதனங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

குறித்த செயலியை பின்வரும் இணைப்பின் மூலம் தரவிறக்கலாம். https://play.google.com/store/apps/details?id=com.neuralprisma