வாகரை இறால் வளர்ப்பு பண்ணை தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை வாகரை சமூக அமைப்புக்கள் மறுக்கின்றன.

(கோபி) வாகரை இறால் வளர்ப்பு பண்ணை தொடர்பாக (08.08.2016) வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தியை வாகரை பிரதேச மீனவ அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மறுக்கின்றன.

கடந்த 28.07.2016 த ஐலன்ட் பத்திரிகையில் கௌரவ மீன்பிடி அமைச்சரினால் கூறப்பட்ட செய்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த இருக்கும் நன்னீர் இறால் வளர்ப்பு திட்டமானது மக்களது எதிர்ப்பினால் வடபகுதிக்கு மாற்றப்படவுள்ளது என செய்தி வெளியானது. இவ்வாறு  செய்தி வெளியாகியபோதும் 08.08.2016ம் திகதி  பத்திரிகையில்  வெளியான செய்தியில் மட்டக்களப்பு வாகரை மீனவ அமைப்புக்கள் இந்த நன்னீர் இறால் வளர்ப்பு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கூறியுள்ளதாக வெளியான செய்திக்கு வாகரை மீனவ அமைப்புக்கள் மற்றும் கிராம அமைப்புக்கள் தமது வன்மையான கண்டணத்தை தெரிவிப்பதோடு இதற்கு எதிர்பு தெரிவித்து அறிக்கை ஒன்றினை மான்புமிகு சனாதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இவ் கடித்தின் பிரதியொன்றை கல்குடா தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தும்  பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஐயா அவர்களிடம் நேரடியாக 08.08.2016 திகதியன்று கொடுத்துள்ளனர்.