இலங்கை வங்கி தனது 77வது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த இரத்ததான நிகழ்வு

இலங்கையின் முதற்தர வங்கியும் உலகின் அதிசிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாகவும் திகழும் இலங்கை வங்கி தனது 77வது ஆண்டு பூர்த்தியினை நாடளாவிய ரீதியில் கொண்டாடிவருகின்றது.

இதன் ஒரு அங்கமாக இலங்கை வங்கியின் கரடியனாறு கிளையானது கடந்த வியாழக்கிழமை அதாவது 18.08.2016 அன்று இரத்த தான முகாம் ஒன்றினை இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் கரடியனாறு இலங்கை வங்கி முகாமையாளர்  திரு. ஆர். பிரேமச்சந்திரனின் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில்  இலங்கை வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் திரு. ஏ. கிருஸ்ணமூர்த்தி,  இலங்கை வங்கி கரடியனாறு கிளையின் உதவி முகாமையாளர் திரு. ரி. பிரியதர்சன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தலைவர்  திரு. ரி . வசந்தராசா, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகரை பிரதேசத்திற்கான தலைவர் திரு. நா. தயாகரன், கரடியனாறு பிரதேச வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திரு. கே.  சுகுமார், கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. எச். ஆர். பி. சேனநாயக்க ஆகியோரோடு வைத்திய அதிகாரிகள், தாதிமார்கள் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.


காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை இடம்பெற்ற இரத்ததான முகாமிற்கு செஞ்சிலுவை சங்க அங்கத்தவர்கள், கரடியனாறு வைத்தியசாலை ஊழியர்கள், கரடியனாறு பொலிஸ் நிலைய உறுப்பினர்கள், மட்டக்களப்பு பொது வைத்தியசாலை  இரத்த வங்கியின் இரத்தம் சேமிக்கும் பிரிவினர் போன்றோர் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

குறுகிய கால எல்லைக்குள் அதிகளவான மக்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.