செங்கலடி புனித நிக்கோலஸ் ஆலய ஆண்டுப் பெருவிழா

(சுபஜன்)
செங்கலடி புனித நிக்கோலாஸ் ஆலய திருவிழா கூட்டுத் திருப்பலி இன்று 21.08.2016 காலை 7 மணிக்கு ஆலயத்தில்  அருட்தந்தை M. ஆக்னல் அமலன் அவர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தை ஞா.மகிமைதாஸ் தலைமயில் இடம்பெற்ற இன்றைய நாள் திருபலியில் அருட்தந்தை ஜோசப்மேரி (யே.சபை) ,அருட்தந்தை இருதயராஜ்(சொ.சபை) ,  அருட்தந்தை பிரபாகர் (சொ.சபை), அருட்தந்தை சஜீவ்(சொ.சபை), அருட்தந்தை பிரபாகர் (சொ.சபை) ஆகியோரும் திருபலியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இன்றைய திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.