வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் "நோயற்ற மக்கள் சூழல் பாதுகாப்பு" எனும் கருப்பொருளுக்கமைவாக பச்சை மரக்கறி, கிழங்கு உற்பத்தி செய்கை திட்டம் கடந்த வௌ்ளிக்கிழமை 05மே் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஈச்சந்தீவு கிராமத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மண்முனை மேற்கு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி தலைமையக முகாமையாளர் அதிதியாக கலந்துகொண்டு மேற்படி திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இதன்போது திட்ட முகாமையாளர் கே.தில்லையம்பலம், வங்கி முகாமையாளர் எம்.மணிவண்ணன், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் த.யோகேஸ்வரன் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பச்சை மரக்கறி வகை, வற்றாளை,மரவள்ளி கிழங்கு உற்பத்தி மற்றும் மிளகாய், கத்தரி உள்ளிட்ட பயிர்கள் நடப்பட்டது. வீட்டுத் தோட்டமாக இச் செய்கை இடம்பெறுவதற்கு இங்குள்ள வாழ்வின் எழுச்சி பயனாளிகளுக்கு திணைக்கள உத்தியோகத்தர்களால் ஆலோசனையும் வழங்கப்பட்டது.
இன்றையதினம் இப் பிரதேச்திலுள்ள 24 கிராமங்களிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.












