இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் அடிப்படை உரிமைகள், ஊடக நெறிமுறைகள், ஊடகங்களின் பொறுப்பு, சட்டம் ஒழுக்க விதிகள் மற்றும் அவதூறு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படன.
இரண்டு நாள் இடம்பெற்ற செயலமர்வில் வளவாலர்களாக சட்டத்தரணி திருமதி . எஸ் .மிருதினி ,மனித உரிமைவளவாளர் கே .சிறிஸ் குமார் . ஊடகவியலாளர் தேவ அதிரன்,சட்டத்தரணி எப் .எக்ஸ்.விஜயகுமார் மற்றும் அக்டெட் நிறுவன திட்ட உத்தியோகத்தர் திருமதி லாவண்ணியா கிறிஸ்ரி , சொண்ட் நிறுவன நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எஸ் . சிவநடராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
இரண்டு நாள் நடைபெற்ற பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்ட ஊடகவியளாலர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.












