உலகின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.இம்முறை நடைபெற்ற 31ஆவது ரியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது.
கடந்த 5ஆம் திகதி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கோலாகலமாக ஆரம்பமாகிய இத்திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்குபற்றினர்.
17 நாட்கள் நடந்தேறிய இந்த
ஒலிம்பிக் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.17 நாட்கள் நடந்தேறிய இந்த
எதிர்பார்த்தது போலவே அமெரிக்கா 46 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என்று மொத்தம் 121 பதக்கத்துடன் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை எட்டியது.
இங்கிலாந்து 27 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலம் என்று 67 பதக்கத்துடன் இங்கிலாந்து 2வது இடத்தை பிடித்தது. சீனா 26 தங்கம் உள்பட 70 தங்கத்துடன் 3வது இடத்தை பெற்றது.
இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். அதில் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலமும், பேட்மிண்டன் ‘புயல்‘ பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.
இலங்கை சார்பில் பங்கேற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வெல்லும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020–ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளன.
















