வரலாற்று நூல்கள் வாசிகசாலைகளிலும், கல்விமான்களிடமும் தங்கியிருக்காமல் மாணவர்களின் கைக்கும் செல்ல வேண்டும்

(படுவான் பாலகன்) வரலாற்று நூல்கள் வாசிகசாலைகளிலும், கல்வி, இலக்கிய பேராசிரியர்களிடம் மட்டும் தங்கி இருக்காமல் பாடசாலை மட்டங்களிலே உள்ள மாணவர்களிடம் சென்றடைந்தால் மண்ணின் வரலாற்றை மாணவர்கள் அறிவார்கள் அதன் மூலம் தங்களது பெருமையை தக்க வைத்துக்கொள்ள வளப்படுத்தி கொள்வார்கள். என மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதி மன்ற நீதிபதி மா.கணேசராசா குறிப்பிட்டார்.

அம்பிலாந்துறை ஸ்ரீ சித்திவிநாயகர் ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய முன்றலில் ஞாயிற்றுக்கிழமை(21) முருகு தயாநிதியினால் எழுதப்பட்ட அம்பிலாந்துறை வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றுகையிலே இதனை தெரிவித்தார்.

மாவட்ட நீதவான் நீதி மன்ற நீதிபதி  தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் மட்டக்களப்பு மாவட்டம்; கல்வியில் உயர வேண்டும். அதனூடாக சகல துறைகளிலும் உயர்நிலையை அடைய வேண்டும். அதற்கான தகைமை உடையவர்கள் இம்மாவட்டத்திலே இருக்கின்றனர். அதனை பயன்படுத்தி இந்த மண் வீரத்தில் மட்டுமல்ல கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.