பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

(Ch.சுஜா)
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்திரகாந்தன் உட்பட சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.