சமஷ்டி என்றால் பெரும்பான்மையின மக்களுக்கு கசக்கிறது. ஒற்றையாட்சி என்றால் தமிழ் மக்களுக்கு கசக்கின்றது - விவசாய அமைச்சர்.கி.துரைராஜசிங்கம்.

(சுபஜன்)
ஒற்றை ஆட்சி என்றால் சிங்கள மக்களுக்கு கசக்கிறது! சமஷ்டி ஆட்சி என்றால் தமிழ் மக்களுக்கு கசக்கிறது என விவசாய அமைச்சர்.கி.துரைராஜசிங்கம். தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வந்தாறுமூலை வேக்ஹவுஸ் வீதி புனரமைப்புவேலை இன்று(08) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். 
ஒற்றை ஆட்சி என்றால் சிங்கள மக்களுக்கு கசக்கிறது! சமஸ்டி ஆட்சி என்றால் தமிழ் மக்களுக்கு கசக்கிறது. ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி இல்லாமல் ஓர் ஆட்சியை உருவாக்க முடியுமா? தமிழர்களும் பெரும்பான்மையின மக்களும் ஏற்கக்கூடிய வகையில் எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி தற்போது சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.   அதில் சமஷ்டி முறையிலான ஆட்சி இருக்கும். சமஷ்டி என்ற பெயர் மட்டும் இருக்காது. ஒற்றையாட்சி என்பது ஒரு நாடு என்பதை மாத்திரம் குறிக்கக்கூடியதாக இருக்கும். அங்கு சட்டவாக்க அதிகாரமும் இருக்கும். அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கிவிட்டு பறித்தெடுக்க முடியாத வகையில் பிராந்திய அமைப்பு என்ற திட்டம் அமையும். புதிய அரசியல் யாப்புக்கு தென்பகுதி மக்களின் அங்கிகாரத்தை அரசாங்கமே பெற்றுக்கொள்ளும். இந்த வகையில்  எங்களது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகிறோம்' என்றார்.   'அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கான திட்டம் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பிடம் இல்லையென கூட்டமைப்பில் உள்ளவர்களில் சிலர் விமர்சிக்;கிறார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவாக்கத்தின்போது, எங்களுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைத்தோம்.   எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடியதும் இதுவரைகால உழைப்புக்கு பயன்தரக்கூடியதுமான ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை நாங்கள் பெறுவதற்கு தயாராகவுள்ளோம். பிராந்திய சபைகளாகவா அல்லது மாகாண சபைகளாக இருக்கப்போகின்றது என்பது தெரியாது. அவ்வாறு பிராந்திய சபைகளாக வரும்போது இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும்' என்றார்.