நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லினக்க செயற்பாட்டின் அடையாளமே காணாமல் போனோருக்கான செயலகம் திறக்கப்படுவதாகும்- அலிசாஹீர் மௌலானா எம்.பி

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லினக்க செயற்பாட்டின் அடையாளமே காணாமல் போனோருக்கான செயலகம் திறக்கப்படுவதாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.

(18.8.2016) புதன்கிழமை மாலை காங்கேயனோடை அல்அக்ஸா பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் நல்லிணக்க செயற்பாட்டை அரசாங்கம் துரிதமாக செயற்படுத்தி வருகின்றது

தற்போது அரசாங்கம் அரசியலமைப்பு பேரவையாக செயற்பட்டு வருகின்றது.
நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டில் நல்லிணக்க செயற்பாட்டை துரிதமாக அமுல் படுத்தி வருகின்றது.

அதே போன்று அரசாங்கம் தகவல் அறியும் சட்ட மூலத்தையும் கொண்டு வந்துள்ளது.
இவ்வாறு நல்லாட்சி அரசாங்கம் அபிவிருத்தியை செய்துவரும் நிலையிலும் தனது நல்லிணக்க செயற்பாட்டை துரிதமாக செயற்படுத்தி வருகின்றது என்றார்.
இந்த வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானாவின் நிதியொதுக்கீட்டில் இருந்து காங்கேயNhனடை முகமத்திய்யா மீனவர் சங்கத்திற்கு 160000.00 ரூபா பெறுமதியான மீன் பிடி உபகரணங்களும், காங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலயத்திற்கு 75000.00 ரூபா பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்களும், காங்கேயனோடை நியு ஸ்டார் மற்றும் பதுறியா விளையாட்டுக்கழகங்களுக்கு தலா 40000.00 ரூபாவும் காங்கேயனோடை பதுறியா குர்ஆன் மதரசாவுக்கு 30000.00 ரூபா பெறுமதியான தளர்பாடங்களும், மற்றும் ஆறு பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த வைபவத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன், மற்றும் மண்முனைப் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.மதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.