வவுணதீவில் பாரம்பரிய மக்கள் இசை கலை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து கடந்த வியாழக்கிழமை மாலை (28ஆம் திகதி) மக்கள் இசை விழா எனும் நிகழ்வினை நடாத்தியது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் ஈச்சந்தீவு கண்ணகிஅம்மன் ஆலய முன்றலில்  இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரட்ணம் கலந்துகொண்டார்.

இதன்போது மக்கள் இசையாக, உடுக்கை ஒலி, கும்மிப்பாடல், வசந்தன்நடனம், கொம்புமுறி பாடல், கூத்துப் பாடல், புள்ளாங்குழல் இசை, கோலாட்டம்  உள்ளிட்ட பல பாரம்பரிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வுகள் மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.சிவானந்தராஜாவின் ஒழுங்கமைப்புின் கீழ் இடம்பெற்றது.

இந் நிகழ்வில்  பிரதம அதிதியினால் கலைஞர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.