குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய தலைவர் திரு.வீ.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாநிதி சி.ஜெயசங்கர், பணிப்பாளர் சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவனம், மற்றும் திரு எம்.உதயகுமார், ஆணையாளர், மாநகரசபை, மட்டக்களப்பு, ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர். இந்நிகழ்விற்கான தொடக்கவுரை கலாநிதி வ.இன்பமோகன், தலைவர், நுண்கலைத்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம், அவர்களாலும் சிறப்புரையினை சிவஸ்ரீ வே.கு.நாகராசா குருக்கள், குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயம், அவர்களாலும் ஆற்றப்படும்.
42 ஆண்டுகளுக்கு முன்னர் குருக்கள் மடத்தைச் சேர்ந்த குருக்கேத்திரன் கதிர்வேற்பிள்ளை அவர்களினால் களரியேற்றம் செய்யப்பட்ட பின்னர் இடம்பெறும் ஒரு முயற்சியாகவே இக்கூத்து செயற்பாடு விளங்குகின்றது.
குருக்கேத்திரன் போர் குருக்கள்மடம் கிராமத்திற்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் பெயர் எடுத்துக்கொடுத்த கூத்தாகும். இக்கூத்தின் மூலமே குருக்கள்மடம் கிராமத்தின் கூத்து முயற்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இக்கூத்து பிரதியே பிற்காலத்தில் மட்டக்களப்பின் பல கிராமங்களிலும் ஆடப்பட்டதாக கூத்துக்கலைஞர்கள் பலரிடமும், பொது மக்களிடமும் இன்று வரை கருத்துக்கள் நிலவுகின்றன.
இவ்வாறு குருக்கள்மடம் கிராமத்தின் தனித்துவமான வரலாற்று அடையாளமாக விளங்கும் குருக்கேத்திரன் போர் கூத்தின் மூலம் சுமார் நான்கு தசாப்தங்களாக விடுபட்டுக்கிடந்த கூத்து முயற்சியை ஆரம்பிக்க வேண்டும் என்பது ஊர் மக்களினதும் இக்கூத்திற்கான முன் ஆயத்தங்களையும் ஏற்பாடுகளையும் செய்து ஒத்துளைப்பு வழங்கிக் கொண்டிருக்கும் குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய நிர்வாகத்தினரினதும் எதிர்பார்க்காகவும் அமைந்திருந்தது. குருக்கேத்திரன் போர் கூத்தினை ஆடுவதன் மூலம் குருக்கள்மடம் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த கூத்தர்களை நினைவுகூரவும்; கௌரவிப்பதாகும் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இம்முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் துறைத்தலைவர் கலாநிதி வடிவேல் இன்பமோகன் அவர்கள். இவருக்கு உதவியாக திரு.சு.சந்திரகுமார், விரிவுரையாளர் கிழக்குப்பல்கலைக்கழகம், திரு.ப.இராஜதிலகன் ஆகியோரும் செயற்படுகின்றனர்.
இக்கூத்தினை பழக்கும் அண்ணாவியாராக சித்தாண்டியைச் திரு.வே.தம்பிமுத்து விளங்குகின்றார். வடமோடி, தென்மோடிக் கூத்துக்களில் சிறந்த தேர்ச்சியும் புலமையும் உடைய இவர் பல வடமோடி, தென்மோடிக் கூத்துக்களை இதுவரை பழக்கி அரங்கேற்றிக் கொண்டிருப்பவர். இவர்; குருக்கேத்திரன் போர் கூத்தினை சந்திவெளி, களுவன்கேணி, மாவடிவேம்பு, சித்தாண்டி என்னும் கிராமங்களில் பயிற்றுவித்த தேர்ச்சியுடையவர். உதவி அண்ணாவியாராக மட்டக்களப்பை சேர்ந்த திரு சீ.அலெக்சாண்டர், திரு ப.கதிர்காமநாதன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். கொப்பியாசிரியராக கன்னங்குடாவைச் சேர்ந்த திரு.கு.பிரபாகரன், திரு.வி.கோடீஸ்வரன் என்போரும் சபையோராக குருக்கள்மடத்தைச் சேர்ந்த திரு.இ.சங்கரப்பிள்ளை, திரு சி. சிவராசா என்போரும் செயற்படுகின்றனர்.
குருக்கேத்திரன் போரில் ஆடும் கூத்தர்களாக
கட்டியங்காரன் : செல்வன் ர.கேசியன்,
குருக்கேத்திரன் : திரு எஸ்.சந்திரகுமார்,
சித்திரரேகை : செல்வன் நி.கேமக்ஷன்,
கிருஷ்ணர் : திரு.இ.வேல்சிவம்,
பரமசிவன் : திரு இ.மதன்,
தருமர் : திரு.ம.புவி,
அருச்சுணன் : திரு.த.ரவி,
வீமன் : செல்வன் யோ.ரோகிலன்,
நகுலன் : திரு.செ.சுகிலன்,
சகாதேவன் : திரு சா.இரவீந்திரராஜா
திரௌபதி : திரு.ப.சந்திரசிவம்,
இந்திரன்ஃ நாரதர் : செல்வன் அ.ரேனுஜன்,
துரியோதனன் : திரு கா.அற்புதன்,
கன்னன்ஃயமன் : செல்வன் வே.லோகிதன்,
சகுனிஃமந்திரி : திரு.ப.இராஜதிலகன்,
பெருந்திருவாள் : திரு.இ.முத்துலிங்கம்,
நாட்டியப் பெண்கள்ஃதோழிமார் : திரு.ஜெ.பிரவீன் மற்றும் செல்;வன்.ர.கேசியன்.












