அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் மாகாணமட்ட விளையாட்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி

(படுவான் பாலகன் ) கிழக்கு மாகாணத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட பாடசாலை மட்ட விளையாட்டுப்போட்டிகளில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டி தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர்.  

மாகாணத்தினால் நடாத்தப்பட்ட 19வயதின் கீழ் பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் முதலாமிடத்தினையும்,  மெய்வல்லுனர் போட்டியான  100மீற்றர் தடைதாண்டலில் சு.சுபத்திரா என்ற மாணவி முதலாம் இடத்தினையும், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் போட்டிகளில் த.குணலெட்சுமி என்ற மாணவி இரண்டாம் இடத்தினையும்,  4 X 400 அஞ்சல் போட்டியில் 19வயது பெண்கள் அணியினர் 2ம் இடத்தினையும் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.


மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் நேற்று(02) செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்று வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதன்போது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை சமூகமும் வாழத்துக்களை தெரிவித்தது.

அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயமானது கடந்த வருடங்களிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.