'அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை' வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம்

(ஜெ.ஜெய்ஷிகன்) 
'அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை' வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு திருத்த வேலைகளுக்கான காசோலைகள் மற்றும் ஒப்பந்தங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் பணிப்பாளர் எம்.டி.எம்.நிஷாம் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாகாணக் கலர்வித் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாகாணத்திற்கான பொறியியலாளர், கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு வலயங்களின் வலயக்கல்விப் பணிப்பாளர்கள், வலயங்களின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்களும் பிரசன்னமாயிருந்தனர். இந் நிகழ்வில் மாகாணக் கல்வி பாடசாலையின் 600 பாடசாலைகள் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்தி குழுக்களின் செயலாளர்களும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
பாடசாலைகளுக்கு திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 90 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும். நிதி நடவடிக்கைகள் மற்றும் வேலைகளின் தரம் என்பவற்றைப் பொறுத்து மேலதிக நிதிகளை இலகுவாகப் பெறலாம் என பணிப்பாளர் விளக்கமளிக்கும் போது சுட்டிக் காட்டினார்.