வவுணதீவில் வாழ்வின் எழுச்சி வாழ்வாதார திட்டத்தினால் உதவியைப் பெற்ற விவசாயியின் அறுவடை ( வீடியோ)

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டு அவர்களது குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.

இதில் ஒன்றாக மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கடந்த 2015ஆம் ஆண்டில் வல்லிபுரம் சிவப்பிரகாசம் எனும் பயனாளிக்கு விவசாயத்திட்டத்திற்கென பயிர்செய்கைக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

இதன் மூலம் இவர் நிலக்கடலை செய்கையினை மேற்கொண்டு தற்பொது அறுவடை செய்து கூடிய இலாபத்தினை அடைந்துள்ளார்.

இது தொடர்பாக எம்மால் நேரடியாக களத்திற்குச் சென்று இதனை  பார்வையிட்டு அவருடன் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.

இதன்போது அவர், முன்னரை விட தற்போதய அறுவடையில் கூடிய இலாபம் அடைந்ததாகவும், இதற்கு இவ் உதவியினை வழங்கிய பிரதேச செயலாளர் மற்றும் சமுர்த்தி(வாழ்வின் எழுச்சி) உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்தார்.