(எப்.முபாரக்)
திருகோணமலை-முதலியார் குளம் பகுதியில் உளநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஒருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா நேற்று வெள்ளிக்கிழமை(19)உத்தரவிட்டார் .
திருகோணமலை ,மொறவெவ, முதலியார் குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் நாற்பது வயதுடைய உளநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக அப்பெண்ணின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வியாழக்கிழமை (18) கைது செய்ததாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மொறவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்













