தொழில் குழுவுக்கான தொழில் திறன் அபிவிருத்தி பயிற்சி நிகழ்வு

(ஜெ.ஜெய்ஷிகன்)
மட்/ ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான தொழில் குழு தொழில் திறன் அபிவிருத்தி பயிற்சி நிகழ்வு  கடந்த 10.08.2016 ஆம் திகதி உதவி பிரதேச செயலாளர் திருமதி. நவரூப ரஞ்சனி முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.


தொடர்ந்து ஐந்து வேலை நாட்கள் முழுமையாக நடை பெறவுள்ள இப் பயிற்சிப் பட்டறை பிரதேசத்தில் கல்வி கற்று வேலை தேடிக் கொண்டிருக்கும் இளையவர்கள் தமது தொழிலுக்கான திறன்களை  வளர்த்துக் கொள்ளும் பயிற்சியாக இது அமைந்துள்ளது . இப் பயிற்சி நெறியில் ஆரையம்பதி பிரதேச செயலக மனிதவள உத்தியோகத்தர் உ.சுரேஷ்குமார், மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தெய்வேந்திரகுமாரி புஸ்பாகரன் ஏறாவூர்ப்பற்று திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.சிவநாதன், மாவட்ட தொழில் சேவை நிலைய அதிகாரி ந. சுரேந்தரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாளை மறுதினம் முடிவுறும் இப் பயிற்சி நெறியானது ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ. தய ஸ்ரீதரின் வழிகாட்டலில் மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையில் மனிதவள அபிவிருத்தி  உத்தியோகத்தர் வி .மைக்கல் கொலினின் ஏற்பாட்டில் நடை பெறுவதும் குறிப்பிடத் தக்கது.