(ஷமி.மண்டூர்) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தைப் பகுதியில் வைத்து வீதியால் சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் இனம்தெரியதவர்களால் வேன் ஒன்றில் (15) திங்கட்கிழமை கடத்திச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு வழங்கிய அவசர தகவலையடுத்து வெல்லாவெளி பிரதான வீதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் வேனை நிறுத்த முற்பட்டபோது அவர்களின் சமிக்கையை மீறி தப்பிச் சென்றதாகவும் பின்னர் கொக்கட்டுச்சோலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வாகனச் சாரதி உட்பட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் இருவரை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் மூவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்திச்செல்லப்பட்ட மாணவியை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.














