எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்திய 7வது தமிழியல் விருது வழங்கும் விழா மட்டக்களப்பில் நடைபெற்றது

(எம்.எஸ்.எம்.நூர்தீன் )

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்திய 2015ம் ஆண்டு;ககான  7வது தமிழியல் விருது வழங்கும் விழா(6.9.2016) செவ்வாய்;க்கிழமை மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் டாக்டர் ஓ.கே.குணநான்; அவர்களின் ஏற்பாட்டில் கிழக்க பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மற்றும் மட்டக்களப்ப மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நாவலாசிரியர் லண்டன் இரா.உதயணன், மக்கள் வங்கி முகாமையாளர் நாடகாசிரியர் எஸ்.சரவணபவன், கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புகாரி பலாஹி இந்தியா கேரளாவைச் சேர்ந்த சங்கராச்சாரியார் பலக்லைக்கழகத்தின் மொழித்துறை பேராசிரியர் எச்.பத்மநாதன்மற்றும் இந்தியா டெல்லி ஜவர்களால் நேரு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை பேராசிரியர் எச்.பாலசுப்பிரமணிம் உட்பட எழுத்தாளர்கள் கலை இலக்கியவாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது 2014ம் ஆண்டுக்கான ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது மூத்தபடைப்பாளி டாக்டர் ஜின்னாசரிப்தீனுக்கு வழங்கப்பட்டது. அதே போன்று 2015ம் ஆண்டுக்கான ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது யாழ்ப்பாணத்தைச் மூத்த படைப்பாளி மறைந்த செங்கை ஆழியான் க.குணராசாவுக்கு வழங்கப்பட்டது. அவர் சார்பில் இந்த விருதிணை அவர் மனைவி பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் 2014 மற்றும் 2015ம் ஆண்டுக்கான தமிழியல் விருதுகள் வழங்கப்பட்டன.

இன நல்லுறவு தமிழியல் விருது, மற்றும் ஓவியருக்கான தமிழியல் விருது, சிறந்த வடிவமைப்புக்கான தமிழியல் விருது, சிறந்த சஞ்சிகைக்கான தமிழியல் விருது, சிறந்த நூல்களுக்கான தமிழியல் விருது என பல தமிழியல்; விருதுகளும் பண அன்பளிப்புக்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.