கலாசார அலுவல்கள் திணைக்களம் அரச நாடக ஆலோசனைக் குழுவுடன் ஒன்றிணைந்து நடத்தும் அரச சிறுவர் நாடக விழா இம்மாதம் 20 ஆந் திகதி தொடக்கம் 27 ஆந் திகதி வரை கொழும்பு டவர் மண்டபத்தில் மாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரைக்கும் நடைபெற்று வருகின்றது.
இவ்விழாவில் நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து இரண்டு சுற்றுக்களில் திறந்த பிரிவிலும், வரையறுக்கப்பட்ட பிரிவிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளிலான சிறுவர் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இதில் கடந்த 24 ஆந் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியின் 'காக்கையாரின் கற்பித்தல்' எனும் சிறுவர் நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது. இந்நாடகத்தினை நாடகப்பாட ஆசிரியரான து.கௌரீஸ்வரன் அவர்கள் எழுதி நெறிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



















