மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை

திருகோணமலை-கன்னியாப் பகுதியில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லையெனப் பெற்றோர்கள், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு (12) முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனதாகக் கூறப்படும் கன்னியா-மிகிந்தபுரத்தைச் சேர்ந்து யோகராஜா துஷானா அனு (வயது 09) மற்றும் எஸ். தனுஸ்க (வயது 11) ஆகியோர் தொடர்பாகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


சிறுவர்கள் காணாமல் போனமை தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.