
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிவேம்பு கிராமம் மாதிரி கிராமமாக தெரிவு செய்யப்பட்டு அதன் ஆரம்ப பணிகளை 05.09.2016 திங்கட்கிழமை அன்று ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உதயசிறிதர் அவர்களும் மட்டக்களப்பு வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் பி.குணரெட்ணம் அவர்களும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் தலைமையுரையாறுகையில், தமது பிரதேசத்திற்குரிய மாவடிவேம்பு கிராமத்தை இத்திட்டத்திற்கு தெரிவு செய்தமைக்கு நன்றிகளை கூறியதுடன் இக்கிராமம் வறுமையான மக்கள் கூடுதலாக வாழும் கிராமம் இங்கு வாழும் மக்கள் தாம் அன்றாட கூலி வேலை செய்யும் மக்களாகவே காணப்படுகின்றனர் என்றார். இவ்வேலைத்திட்டத்திற்கான பணம் கிடைக்கப் பெறாமலே இன்றே நாங்கள் வீதிக்கான கிறவலினை இறக்கி சிரமதான அடிப்படையில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாவும் குறிப்பிட்டார்.
இதன்போது வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் பி.குணரெட்ணம் பேசுகையில், இக்கிராமத்திற்கு மொத்தம் 7 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 4 மில்லியன் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் . 2 மில்லியன் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், ஒரு மில்லியன் வியாபார களஞ்சியம் அமைப்பதற்கும் செலவிடப்படும் இவ்வேலைத்திட்டங்கள் யாவும் 2016.11.30 முடிவடைய வேண்டும் .
இம்மாதிரிக்கிராமத்திற்கான வேலைத்திட்டம் 3 வருடங்களில் முடிவடைந்து ஒரு சுபிட்சமான கிராமமாக திகழ கிராம உத்தியோகத்தர், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் அற்பணிப்புடன் கடமையாற்றவேண்டும்.
என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி தலமையக முகாமையாளர், வாழ்வின் எழுச்சி முகாமையாளர்கள், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், மாவட்ட செயலக வாழ்வின் எழுச்சி முகாமையாளர், கிராம அபிவிருத்திசங்க தலைவர், சமுர்த்தி சங்க தலைவர்கள் என பல திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
சமூக வலுவூட்டல் மற்றும் நலநோம்புகை அமைச்சின் கீழ் நாடு பூராகவும் மாவட்ட ரீதியாக ஒரு மாதிரிக்கிராமத்தை தெரிவு செய்து இதை சுபீட்சமான கிராமமாக மாற்ற வேண்டும் என்கின்ற எண்ணக்கருத்தை சமூக வலுவூட்டல் மற்றும் நலநோம்புகை அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்கா அண்மையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



















