தும்பங்கேணி இ.வி.திகிராமத்தில் ‘ சித்திவிநாயகர் ஆலய நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பில் கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் “சக்கரநாற்காலி”வழங்கிவைக்கப்பட்டன.
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் தும்பங்கேணி இ.வி.தி பாலர் பாடசாலையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் தேசிய மனிதவள அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் சித்திவிநாயகர் ஆலய நிர்வாக தலைவர் பூ.புவிகரன் கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் செயலாளர் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் நாவலர் சமூக மேம்பாட்டு அமைப்பு உறுப்பினர்கள் வெள்ளிமலையான் விவசாய அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந்து கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கல், கஷ்டப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கல், வறுமையில் வாழும் நபர்களுக்குஉலர் உணவுப் பொதி வழங்கல், புண்ணிய ஸ்தலங்களுக்கான தலயாத்திரை செல்லல் மற்றும் விசேடதினங்களில் ஆலயங்களில் அன்னதான நிகழ்வுகள் செய்தல் எனப்பல செயற்பாடுகளை இவ் அமைப்பு மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.



















