வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினால் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கண்டனப்பேரணி

(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கண்டனப்பேரணி கடந்த புதன்கிழமை (14) வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

 போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கண்டனபேரணி ஊரியன்கட்டு கிராமசேவகர் பிரிவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு  வாகரை பிரதான வீதியின் ஊடாக பேரணியாக வருகை தந்து வாகரை 5ம் வட்டார கிராமத்திற்கு அருகில் நிறைவு பெற்றது. 

ஊரியன்கட்டு கிராம சேவகர் பிரிவிற்கான வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.அசோகலிங்கம் மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள சமூக அபிவிருத்தி உத்தியோகத்தரான க.சிவசுதன் ஆகியோர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியில் பல கிராம சேவகர் பிரிவிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  மற்றும் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி. தேவமனோகரி பாஸ்கரன் மற்றும் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் ச.ரவிச்சந்திரன் மற்றும் வலய உதவியாளர் திருமதி. இக்னேஸ் தயாளன் மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் அதனைத் தொடர்ந்து வாகரை மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்படடிருந்ததும் குறிப்பிடத் தக்கது.