மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாலர்சேனை காலசூரி விநாயகமூர்த்தி வித்தியாலயத்தின் தற்காலிக பாடசாலை 08ஆம் திகதியன்று வீசப்பட்ட சுழல் காற்றினால் சேதமாக்கப்ட்டுள்ளது.கடந்த ஏப்பல் மாதம் அக் கிராமத்தின் அபிவிருத்திச் சங்கத்தின் உதவியால் அமைக்கப்பட்ட தற்காலிக தகரத்தினாலான பாடசாலையே திடீரென ஏற்பட்ட சுழல் காற்றினால் தேமாக்கப்பட்டுள்ளது.
இப் பாடசாலையில் 29க்கும் மேற்பட்ட தரம்1 கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். இவர்கள் நேற்றயதினம் 09ஆம் திகதி பாடசாலைக்கு அருகிலுள்ள மர நிழலில் இருந்தே கல்வி பயின்றனர்.
இப் பாடசாலை அடிப்படை வசதிகள் எதுவுமில்லாமல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இயங்கி வருவதாக கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்தனர்.


















