வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் அவர்களின் ஆலோசணைகளுக்கும் வழிகாட்டலுக்கும் அமைய உலக இருதய தினத்தை (செப்டெம்பர் 29) சிறப்பிக்கும் வகையில் சுகாதார கல்விப்பிரிவு மற்றும் மருத்துவப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வானது இன்று காலை 11.00 மணியளவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 'உங்களது இதயத்தை சக்தியுள்ளதாக மாற்றுவோம்' எனும் தொனிப்பொருளை வெளிப்படுத்தும் செயலமர்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயந்த விஜயரூப அவர்களால் நடாத்தப்பட்டதுடன் சுகாதார கல்விப் பிரிவினால் அது சார்ந்த துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Power Your Heart எனும் தலைப்பினாலான கலந்துரையாடலில் கருத்தரங்கில் விசேட வைத்திய நிபுணர்கள் - வைத்திய அதிகாரிகள் - உள்ளக பயிற்சி வைத்தியர்கள்- தாதிய பரிபாலகி - தாதிய சகோதரிகள் - தாதிய உத்தியோகத்தர்கள் நிர்வாக உத்தியோகத்தர் - பொது முகாமைத்துவ உதவியாளர்கள்-சிற்றூழிய மேற்பார்வையாளர்கள் -சுகாதார உதவியாளர்கள் என மற்றும் பலர் பங்குபற்றி தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஐயங்களுக்கான தெளிவினையும் பெற்றுக்கொண்டனர்.
நிறைவாக அவசர சிகிச்சைப் பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் சோதீஸ்வரன் அவர்களின் நன்றியுரையுடன் அனைத்து நிகழ்வுகளும் இனிதே சுமுகமாக நிறைவுபெற்றது.



















