மண்முனைப்பற்று பிரதேசத்தில் வாழ்வின் எழுச்சிதிணைக்களத்தின் சிசுதிரியபுலமைபரிசில் வழங்கும் நிகழ்வு


மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட வறிய மாணவர்களின் கல்வி நலனை கருத்திற் கொண்டு மண்முனைப்பற்று பிரதேசசெயலக வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் சமூகசேவைப்பிரிவினால் 40 வறிய மாணவர்களுக்கு தலா 500/= வீதம் ஓரு வருடத்திற்கு புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி N.சத்தியானந்தி  தலைமையில் 08.09.2016 வியாழன் அன்று பிரதேசசெயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.


இவ் விழாவிற்கு வாழ்வின் எழுச்சி தலைமையக முகாமையாளர், முகாமைத்துவபணிப்பாளர்,பாடசாலைஅதிபர்கள், வாழ்வின் எழுச்சி சமூகசேவை உத்யோகத்தர், வாழ்வின் எழுச்சி உத்யோகத்தர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்