கதிரவெளி வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியினால் சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதிக்கான கொடுப்பனவு வழங்கல்

 (ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிலும் இறப்பிற்கான கொடுப்பனவினை இறப்பு நடந்த அன்றைய தினமே வழங்குவதற்கு பிரதேச செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கதிரவெளி வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியினால் அம்மந்தனாவெளி கிராம சேவகர் பிரிவில் உள்ள கோமத்தலாமடு கிராமத்தில் உள்ள சமுர்த்தி பயனாளி கந்தையா கந்தசாமி என்ற குடும்பத்திற்கே இறப்பு நிகழ்ந்த அன்றைய தினமே சமூக பாதுகாப்பு நிதிக்கான கொடுப்பனவு கதிரவெளி வாழ்வின் எழுச்சி வங்கி முகாமையாளரினால் சம்பவம் நடைபெற்ற குடும்பத்தினரின் வீட்டிற்கு  சென்று வழங்கி வைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன், வங்கி முகாமையாளர் ச.ரவிச்சந்திரன் , அம்மந்தனாவெளி கிராம சேவகர் பிரிவிற்கான வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.அருள்ஜோதி மற்றும் ஊரியன்கட்டு கிராம சேவகர் பிரிவிற்கான வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.அசோகலிங்கம் ஆகிய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.