மட்டக்களப்பு மேற்கு - பாவற்கொடிச்சேனை வினாயகர் வித்தியாலயத்தில் மாடி கட்டடத்திற்கு அடிக்கல் ​வைப்பு

மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட  மட்/மமே/ பாவற்கொடிச்சேனை வினாயகர் வித்தியாலயத்தில் கடந்த புதன்கிழமை 15ஆம் திகதி இரண்டுமாடிக் கட்டடத்திற்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அடிக்கல்லினை வைத்தார்.

மிகவும் பின்தங்கிய பிரதேசமாக கருதப்படும் பாவற்கொடி்சேனை கிராமம் கடந்தகால யுத்த அனர்த்தங்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாகும். இங்குள்ள  இப் பாடசாலைக்கு மாணவர் கல்வி கற்பதற்கு பாடசாலைக் கட்டடம் கடந்த பல வருடங்களாக ஓர் குறையாக காணப்பட்டது, இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ரூபா 1கோடி 40 இலட்சம்  நிதி ஒதுக்கீட்டில் புதிய இரண்டுமாடிக் கட்டடம் அமையவிருக்கின்றது.

இவ் அடிக்கல் நடும் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்,அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்,முன்னாள் காத்தான்குடி நகர சபைத்தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.மகேந்திரன், அதிபர் எஸ்.ரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.